ஆப்நகரம்

தமிழகத்தை தாக்க வரும் புதிய புயல்!

வங்க கடலில் அடுத்த இரு தினங்களில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.

Samayam Tamil 22 Nov 2020, 12:58 pm
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வங்க கடலில் புயல் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cyclone


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

சம்மதிக்காத ரஜினி; மனம் மாறிய சசிகலா: கூட்டணிக்கு பின்னால் உள்ள கணக்கு!

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.

இது தமிழக கடற் பகுதிகளை நோக்கி நகர்ந்து காரைக்கால் மகாபலிபுரம் இடையே 25ஆம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நாளை (நவம்பர் 23) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புக்காக 24 25 தேதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி