ஆப்நகரம்

நெல்லை அரசு மருத்துவமனையில் சடலங்களை காணவில்லை

நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் காணாமல் போனதாக தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

TNN 18 May 2017, 4:10 pm
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் காணாமல் போனதாக தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
Samayam Tamil deadbodies theft from nellai government hospital
நெல்லை அரசு மருத்துவமனையில் சடலங்களை காணவில்லை



நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் சட்டம் மூலம் அரசு மருத்துவமனையில் சடலங்களை காணாமல் போனது,ஆதரவற்றோரை மீட்பதில் முறைக்கேடு , அடையாளம் தெரியாத சடலங்களை வாங்கி எரித்ததில் முறைக்கேடு உள்ளிட்ட தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

மேலும் இந்த முறைக்கேட்டில் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இந்த மனுவின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் நெல்லை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

வழக்கறிஞர் பிரம்மா வின் மனுவை விசாரித்த நெல்லை நீதிமன்றம் , செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி முன்னாள் தலைவர் , பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி