ஆப்நகரம்

என்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க!

தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருத்துகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 6 Dec 2019, 1:29 pm
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பருவக்கால அவசர நிலை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான திருநாவுக்கரசர் பங்கேற்றார்.
Samayam Tamil Thirunavukkarasar


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் வழக்கு தொடர்பாக பதிலளித்தார். அதாவது, "உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வெளிப்படையாக நடத்த வேண்டும்.

இதைத் தான் அப்பவே சொன்னோம்: மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெருமிதம்!

தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை. முறைப்படி நடத்த வேண்டும் என்று தான் கேட்கிறோம். உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயமில்லை. எப்படியாவது தேர்தல் நடந்து தான் ஆக வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக பேசுகையில், ”குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டும். தூக்கு தண்டனை வரை கொடுக்கலாம். ஆனால் என்கவுன்ட்டர் ஏற்கதக்கதல்ல” என்றார்.

ஊடக செய்திகளை நம்புகிறேன் - சிரித்தபடி புகழ்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பின்னர் வெங்காய விலை உயர்வு பற்றி பேசினார். அதாவது, “வெங்காய விலை தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பாஜக தற்போது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் வகையில் செயல்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சாப்பிடுகிறார் என்பது நாட்டுக்கு முக்கியமல்ல. அது அவசியம் இல்லாதது. வெங்காய விலை குறைக்கப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெலங்கானா என்கவுன்ட்டர் - என்ன சொல்கிறார்கள் தமிழக பெண் அரசியல்வாதிகள்!

வெங்காய விலை தொடர்பான பேச்சை நிர்மலா சீதாராமன் தவிர்த்திருக்க வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தை, மதத்தை, சாதியைப் பற்றி பேச நான் விரும்பவில்லை" என்று திருநாவுக்கரசர் எம்.பி கூறினார்.

அடுத்த செய்தி