ஆப்நகரம்

தஞ்சாவூரில் பேருந்து – மினி லாரி மோதிய விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

TNN 15 Jul 2017, 9:38 pm
தஞ்சாவூர் : அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil death toll touches 10 in the road accident in vallam in thanjavur
தஞ்சாவூரில் பேருந்து – மினி லாரி மோதிய விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!


கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியும் தஞ்சை அருகே வல்லம் பகுதியில் உள்ள பாலத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. பிரேக் டவுன் காரணமாக மினி லாரியானது சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியின் மீது வேகமாக வந்த பேருந்து மோதியது. இதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பயணிகள் யார் என்று வல்லம் காவல்துறையால் அடையாளம் காணமுடியாத நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பூங்குழலி (40) கும்பகோணம், பேருந்து ஓட்டுநர் எம்.ரவிச்சந்திரன் (40), இடுவாய் (திருப்பூர்), டிரக் ஓட்டுநர் ஜி.சதீஷ் (23) உறையூர், அருள்மொழி (19), கும்பகோணம், ஆனந்தி (20), மன்னார்குடி, துர்கா தேவி (24), நீடாமங்களம், ஹேமலதா (28), பூக்கொள்ளை, மாலினி (19), டி.பழூர் மற்றும் புவனா, மன்னார்குடி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இறந்த ஒரு பெண் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. விபத்தில் காயம் அடைந்த 19 பேர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி