ஆப்நகரம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பும், நீட் தேர்வும் - அமைச்சர் முக்கியத் தகவல்!

நீட் தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கியத் தகவல் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 19 Oct 2020, 12:59 pm
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் விட்டு வைக்கவில்லை. இதனால் குழந்தைகளும், இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil TN Schools Reopen


முதல்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டும் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற வகுப்பினருக்கு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழகத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்விற்கான இலவசப் பயிற்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவதற்கு மட்டுமே அளிக்கப்படும். இந்த தேர்வை இரண்டாவது முறை எழுத வேண்டுமெனில் தனியார் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுத் தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறினார்.

மேலும் பேசுகையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் 300க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்றார்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன் புதுத் தகவல்!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெளிவாகியுள்ளது. அதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி