ஆப்நகரம்

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ஜாமீன் மனு நிராகரிப்பு

ரூ.200 கோடி மதிப்பிலான சிலையை கடத்தியதாக தீனதயாளன் மீது புகார் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் ஜாமீன் மனுவை நிராகரித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 3 Aug 2016, 7:45 pm
சென்னை: ரூ. 200 கோடி மதிப்பிலான சிலையை கடத்தியதாக தீனதயாளன் மீது புகார் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் ஜாமீன் மனுவை நிராகரித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil deenadhayalans bail rejected by chennai sessions court
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ஜாமீன் மனு நிராகரிப்பு

சென்னையின் ஆழ்வார்பேட்டையில் பல்வேறு பழங்கால கோயில்களில் இருந்து கடத்திவரப்பட்ட சிலைகள் பதுக்கு வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ராஜா, குமார், மான்சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்த தீனதயாளனும் கைது செய்யப்பட்டார்.

இவரகள் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி இவர்களின் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி