ஆப்நகரம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் இரு நாள்களுக்கு மழை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2021, 12:53 pm
வடக்கு வங்ககடல், அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும்.
Samayam Tamil tn rains today


இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு (11.06.2021,12.06.2021) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
மாஜி அமைச்சர்கள் மீது பாலியல் புகார்: அடுத்து சிக்கப் போவது யார்?
ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி) 4, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
டீ கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதியா? இன்று வெளியாகும் அறிவிப்பு!
இன்று முதல் ஜூன் 13 வரை தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் ஜூன் 15 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி