ஆப்நகரம்

இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் இல்லத்துக்கு ஜெ.தீபா வருகை?

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லதிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 8 Feb 2017, 2:36 pm
சென்னை: இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லதிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil deepa jayaram likely to visit ops today
இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் இல்லத்துக்கு ஜெ.தீபா வருகை?


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்தார். கட்டாயத்தின் பேரில் தான், ராஜினாமா செய்தேன் என்று நேற்று அதிரடி தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினர் குறித்து குற்றம் சாட்டிய அவர், இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டபேரவையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு எப்போதுமே மரியாதை அளித்து வருகிறேன். அவரை நான் வரவேற்கிறேன். இனைந்து செயல்படத் தயார் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லதிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, இன்னும் சற்று நேரத்தில் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Deepa Jayaram likely to visit OPS today?

அடுத்த செய்தி