ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் போட்டியிடும் தீபாவின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

TNN 24 Mar 2017, 5:10 pm
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
Samayam Tamil deepa nomination accepted by ec in rk nagar byelection
ஆர்.கே.நகரில் போட்டியிடும் தீபாவின் வேட்புமனு ஏற்பு


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை. தனது கணவர் பேட்ரிக் மாதவன் பெயரையும், அவரது கணவர் பேட்ரிக் மாதவன் வங்கி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதுபோன்ற காரணங்களால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில் தீபாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் அறிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரவையை நிர்வகிப்பதில் தீபாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக தீபாவை விட்டு, அவரது கணவர் மாதவன் விலகியுள்ளார். இதேபோல் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவைத் தலைவர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோரது மனுக்களும் ஏற்கப்பட்டன.

Deepa nomination accepted by EC in RK Nagar byelection.

அடுத்த செய்தி