ஆப்நகரம்

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு செல்ல 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 27 Sep 2018, 7:30 pm
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல 22 ஆயிரம் பேருந்து வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil samayam-bigg-boss-cover-pic
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

அந்த வகையில் அவர்களுக்காக போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கப்படும். சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேண்டி சென்னையிலிருந்து 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.

நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி