ஆப்நகரம்

இனி காதுகேளாதோரும் தேர்தலில் போட்டியிடலாம்: அரசாணை வெளியீடு

இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2019, 6:08 pm
இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil chennai corporation


இதுவரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் காது கேளாதவராகவோ, வாய் பேச முடியாதவராகவோ இருந்தால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சட்டவிதி இருந்தது.

சென்னையில் குரு நானக் ஜெயந்தி சிறப்பு புகைப்படங்கள்!!

அதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்பவர் தொழுநோயாளியாக இருக்கும் பட்சத்திலும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்றும் சட்ட விதி இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விதியானது நீக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டத்திருத்தம் நடைபெற்றது.

பொருளாதாரம் வளரவே வளராது! ஆய்வில் எச்சரிக்கை!

அதாவது, இந்த விதிகளை வரையறுக்கும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி