ஆப்நகரம்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உணவு: பள்ளிக் கல்வித்துறை எடுக்கும் முடிவு என்ன?

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Samayam Tamil 5 May 2022, 7:11 am
பனிரெண்டாம் பொதுத் தேர்வு இன்று தொடங்கி மே இறுதி வரை நடைபெற உள்ளது. இதே போல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. பொதுத் தேர்வை 26.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil tn school students


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. காலை 10 மணிக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் காலை உணவை முடித்துவிட்டு 8 மணிக்கே பள்ளிகளுக்கு வந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.45 மணிக்கு தான் தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை தேர்வுக்கு தயாராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இ சேவை மையங்கள்... அமைச்சர் சொன்னை ஹேப்பி நியூஸ்!
8 மணிக்கு பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றால் 7 மணிக்குச் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும். மதியம் 1:15 வரை தேர்வறையில் இருக்க வேண்டும். திரும்பவும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல மதியம் 2:00 அல்லது 3:00 மணியாகலாம்.

இவ்வளவு விரைவாக தேர்வுக்கு வரவேண்டும் என்று சொல்லும் கல்வித்துறையும் தேர்வுத்துறையும் மாணவர்களுக்கு காலை, மதிய உணவுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி