ஆப்நகரம்

பேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்க வாய்ப்பா? இதுக்கு பின்னால இப்படி ஒரு பிரச்சினை!

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Samayam Tamil 31 Jul 2020, 7:32 am
பொது முடக்கம் அடுத்த மாதமும் தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதை தடுக்கும் நோக்கில் அமைந்துள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டைப் போடும் வகையிலேயே இந்த அறிவிப்பு இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil start bus services in tamilnadu soon


அனைத்து நிறுவனங்கள் இயங்க அனுமதி, கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு ஆகியவை தளர்வுகளின் பட்டியலில் இடம்பெற்றாலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு தொழில் துறையை மேலும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது. சிற்றூர், சிறு நகரங்களிலிருந்து அருகிலுள்ள நகரங்களில் நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் பணியாற்றச் செல்லும் மக்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் மட்டுமே பணிக்குச் செல்ல முடிகிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வைக் குறைக்க ஸ்டாலின் சொன்ன யோசனை!

தமிழ்நாட்டில் திருச்சி - செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி - செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை - விழுப்புரம், கோயம்புத்தூர் - காட்பாடி, அரக்கோணம் - கோயம்புத்தூர், திருச்சி - நாகர்கோவில், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஆகிய தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மாதம் வைரஸ் பரவல் அதிகரித்தவுடன் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே தரப்பில் மேற்சொன்ன சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும் நோக்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. நிறுவனங்களின், கடைகளின் நேரங்கள் அதிகரிக்கப்பட்டாலும் பணியாளர்கள் வருவதற்கும், வாடிக்கையாளர்கள் வருவதற்கும் வழி செய்து கொடுக்காமல் எப்படி தொழில் நடத்துவது என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு, சில தளர்வுகளும் உள்ளது!

மேலும் தமிழ்நாடு அரசு நிர்வாக வசதிக்காக பல்வேறு புதிய மாவட்டங்களை சமீபத்தில் பிரித்தது. இதனால் மாவட்டங்களின் எல்லைகள் சுருங்கியுள்ளதன் விளைவாக வழக்கமாக அருகிலுள்ள நகரங்களுக்கு பணி நிமித்தம் சென்று வந்தவர்கள் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதால் இ பாஸ் பிரச்சினையை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்துக்கு தடை தொடரும் என அரசு அறிவித்துள்ள நிலையில் மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவித்துள்ளது.

எனவே அந்த மறு உத்தரவை ஒரு வாரம் கழித்தோ அல்லது பதினைந்து நாள்கள் கழித்தோ அரசு பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர் பொது மக்கள்.

அடுத்த செய்தி