ஆப்நகரம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை- ராதாகிருஷ்ணன் பேட்டி

டெங்க்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Samayam Tamil 22 Oct 2018, 12:45 pm

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலில் மூன்று பெண்கள் மரணம்!

undefined

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னையில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil radhakrishnan-health-secreatory
டெங்கு காய்ச்சல் : பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்


சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது பேசிய அவர், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.


மேலும் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பில் 2 சதவீதம் பேர் மட்டுமே மரணம் அடைகின்றனர். மீதமுள்ள 98 சதவீதம் நபர்கள் உயிர் பிழைக்கின்றனர். அதேபோல பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர். காய்ச்சல் வந்த 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மழை நீர் மற்றும் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், பழைய பொருட்களை நிறுவனங்கள் அகற்ற வேண்டும், தண்ணீர் தேக்க தொட்டிகளை திறந்து வைக்க கூடாது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, செய்தியாளர் சந்திப்பில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி