ஆப்நகரம்

ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 2 Jul 2022, 1:14 pm

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 இடங்களை நிரப்புவதற்காக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
Samayam Tamil tn school teacher


தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதல் நிலை ஆசிரியர் பணியிடங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

எடப்பாடி பயப்படுவது இதற்கு தான்: பொதுக்குழு நடக்க வாய்ப்புள்ளதா?

முன்னதாக ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்து சான்றிதழ் சரிபார்ப்பில் இருப்பவர்கள் பலர் இருக்க தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் மொட்டை அடித்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எதிர்ப்பு அதிகமாக வந்ததால் பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி