ஆப்நகரம்

அதிக லீவு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பாய்ந்தது சுற்றறிக்கை!

அதிகமாக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

Samayam Tamil 20 Dec 2020, 6:24 pm
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அடுத்த கட்ட பொது முடக்கத்தை தளர்வுகளுடன் அறிவித்த தமிழக அரசு, கல்லூரி இளங்கலை இறுதி வகுப்புகளை டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளித்தது. அதன்படி கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


முன்னதாக, கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே ஆசிரியர்கள் பணி புரிந்தாலும், அதிகமாக விடுப்பும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. அதுதவிர சில ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர மற்ற காரணங்களுக்காகவும் அதிகமாக விடுப்பு எடுப்பதாக புகார் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், அதிக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழக மக்களுக்கு இன்றே கடைசி - அப்புறம் பொங்கல் பரிசு கிடைக்காது!

அதன் தொடர்ச்சியாக, அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மருத்துவ விடுப்பு தவிர அதிகமான விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

அடுத்த செய்தி