ஆப்நகரம்

வீடு விவகாரம்: நல்லக்கண்ணுவுடன் துணைமுதல்வா் தொலைபேசியில் பேச்சு

வீடு ஒதுக்குவது தொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொிவித்துள்ளதாக நல்லக்கண்ணு கூறியுள்ளாா்.

Samayam Tamil 11 May 2019, 10:39 pm
வீடு ஒதுக்குவது தொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொிவித்துள்ளதாக நல்லக்கண்ணு கூறியுள்ளாா்.
Samayam Tamil Nallakannui


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அந்தக் குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் வரவுள்ளதால் அங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு இடம்பெயருமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து அந்தக் குடியிருப்பில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நல்லகண்ணு அவர்களும் தன் அரசு குடியிருப்பு வாடகை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தற்போது அவர் சென்னை கே.கே.நகரில் குடியேறியுள்ளார்.

தமிழக பொதுவுடைமை அமைப்பின் மூத்த தலைவருக்கு தமிழக அரசு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பலவும் கோாிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் வீடு விவகாரம் தொடா்பாக துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நல்லக்கண்ணுவிடம் தொலைபேசியில் பேசியுள்ளாா். இது தொடா்பாக பேசியுள்ள நல்லக்கண்ணு, வீடு ஒதுக்குவது தொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்று துணைமுதல்வா் தொிவித்துள்ளதாக கூறியுள்ளாா்.

அடுத்த செய்தி