ஆப்நகரம்

#RKNagar இந்திய துணைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா ஆலோசனை நடத்தி வருகிறார்.

TNN 30 Mar 2017, 5:08 pm
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா ஆலோசனை நடத்தி வருகிறார்.
Samayam Tamil deputy election commissioner held discussion with representatives of the authorized party
#RKNagar இந்திய துணைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சாட்சி சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜக சார்பாக கங்கை அமரன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுயேட்சைகள், இதர கட்சிகள் என மொத்தம் 62 பேர் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

பல முனைப் போட்டிகள் நிலவி வரும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெரும் முனைப்புடன் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் தீவிர கட்டுப்பாட்டுக்குள் அத்தொகுதி வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பிரதிநிதிகளுடன் இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Deputy Election Commissioner held discussion with representatives of the authorized party

அடுத்த செய்தி