ஆப்நகரம்

16 ஆயிரம் பேருந்துகளில் ஊருக்கு கிளம்பும் மக்கள்!

தீபாவளிப் பண்டிகையை முடித்து ஊர் திரும்பும் மக்களுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Nov 2020, 1:04 pm
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 11 முதல் 13 காலை 09.00 மணி வரையில் மட்டும் மொத்தம் 6,039 பேருந்துகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 605 பயணிகள் பயணித்தனர். அதற்கடுத்த இரு நாள்களிலும் தொடர்ந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Samayam Tamil tn special bus


நேற்று தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறையையும் உற்சாகமாக கொண்டாடும் மக்கள் இன்றிலிருந்து ஊர் திரும்ப உள்ளனர். அதனால் இன்றிலிருந்து புதன் கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வழக்கமாக ஒவ்வொரு நாளும் 2000 பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையால் இயக்கப்படுகின்றன. அத்துடன் இன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 1395 சிறப்பு பேருந்துகளும், சென்னை தவிர்த்து இதர இடங்களுக்கு 1915 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அடேயப்பா, மூன்று நாள்களுக்கு விடாமல் வெளுக்கப்போகும் மழை!

அதேபோல் நாளை சென்னைக்கு 1092 சிறப்பு பேருந்துகளும், பிற இடங்களுக்கு 1405 சிறப்பு பேருந்துகளும் இயக்கபடவுள்ளன. செவ்வாய் கிழமை சென்னைக்கு 565 சிறப்பு பேருந்துகளும் பிற இடங்களுக்கு 770 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. புதன் கிழமை சென்னைக்கு 364 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு 520 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சசிகலா ரிலீஸ் எப்போது? எதிர்பார்க்கும் எடப்பாடி - காரணம் இதுதான்!

இந்நிலையில் நான்கு நாள்களில் வழக்கமாக இயக்கப்படும் 8000 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 8026 சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து 16 ஆயிரத்து 026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அடுத்த செய்தி