ஆப்நகரம்

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துக்கள் :தேவகவுடா

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கடிதம் மூலம் தேவகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 9 Oct 2016, 10:23 pm
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கடிதம் மூலம் தேவகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil deva gowda greets jayalalitha
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துக்கள் :தேவகவுடா


முன்னாள் பிரதமர் தேவகவுடா தமிழக அரசின் செயலாளருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியா மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருக்கின்றனர். முதல்வர் விரைவில் முழு நலம் பெற என்னுடைய வாழ்த்துக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்த்து.

அம்மா மீண்டும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வார். கடவுளும் இன்னொரு முறை அவர் ஆட்சி செய்யும் வாய்ப்பு கொடுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த தேவகவுடாவின் அந்த வாழ்த்து அரசியல் நாகரிகமாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி