ஆப்நகரம்

காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; டிஜிபி சைலேந்திர பாபு போட்ட உத்தரவு!

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து அனைத்து காவலர்களுக்கும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2021, 11:01 am

ஹைலைட்ஸ்:

  • தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் அனுப்பிய முக்கிய சுற்றறிக்கை
  • புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன
  • அனைத்து காவலர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Sylendrababu IPS
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செலவில்லா மருத்துவ வசதியை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னதாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த ’புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2016’ கடந்த ஜூன் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதையடுத்து ’புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்-2021’ அமல்படுத்தப்பட்டது. இதற்காக யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
விஸ்வரூபம் எடுத்த தீபாவளி ஸ்வீட் ஊழல்; ஆட்டத்தை முடிச்சு வச்ச ஸ்டாலின்!
சைலேந்திர பாபு சுற்றறிக்கை

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021 வசதியை கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகள் பெறலாம். இதன்மூலம் 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும்.

அறிவிப்பு பலகையில் விளம்பரம்

அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு 20 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். இது நிதித்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயன்களை பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 1,169 மருத்துவமனைகளின் விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு பலன் தருமா பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு?
இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 1800 233 5666 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதன் விவரங்களை அனைத்து காவலர்களுக்கும் தெரியும் வகையில் காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்று சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி