ஆப்நகரம்

காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு- தமிழக டிஜிபி எச்சரிக்கை

சென்னை: பணியில் உள்ள காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Jan 2019, 9:47 am
பணியில் உள்ள காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து பிரிவு காவல்துறையினரும் பணி நேரத்தில் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
Samayam Tamil Capture


எனினும், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள், கைப்பேசி பயன்படுத்தியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அந்த அதிகாரிக்ள், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே பணிநேரத்தில் காவலர்கள் கைப்பேசி பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக கருத்து பதிவு செய்திருந்தது.

அதை தொடர்ந்து, டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் பணியில் ஈடுபடும் காவலர்கல் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது என்றும், அதைமீறி செயல்படும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் காவலர்கள் முற்றிலும் கைப்பேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி