ஆப்நகரம்

'மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன்'.. நட்டாவுக்கே அதிர்ச்சி தந்த பாஜக நிர்வாகி..!

தருமபுரி , கிருஷ்ணகிரி பாஜக கோட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து பாக்கியராஜ் ராஜினாமா செய்தார்.

Samayam Tamil 10 Mar 2023, 5:09 pm
கிருஷ்ணகிரியில் இன்று பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திறந்து வைத்த நேரம் பார்த்து தருமபுரி, கிருஷ்ணகிரி பாஜக கோட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து பாக்கியராஜ் ராஜினாமா செய்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Samayam Tamil jp natta


பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள் 13 என அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, அதிமுக பாஜகவை வேட்டையாடுகிறது.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை இது காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமியை போல அதிமுக புள்ளிகளை நான் வேட்டையாட முடிவு செய்தால் என்னுடைய லிஸ்ட் பெரியதாக இருக்கும். அதற்கான, நேரத்தையும் இடத்தையும் நான் முடிவு செய்வேன் கட்சியை விட்டு நான்கு பேர் சென்றுவிட்டால் எனது வேகம் குறைந்துவிட போவதில்லை... இனிமேல்தான் வேகம் அதிகரிக்கும்... என்னை திட்டிவிட்டு போறவர்கள் பொது சேவையையோ அல்லது விவசாயமோ செய்தால் பரவாயில்லை... அவர்களும் வேறொரு கட்சியில் சேர போறாங்க.. அங்க சென்று இன்னொரு தலைவரை வாழ்க என்று சொல்ல போறாங்க... என அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிலையில், பாஜகவின் சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

'சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'..? பிரஷாந்த் கிஷோர் பாய்ச்சல்..!

அந்த அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன். அண்ணாமலைக்கு சகோதரர் CTR. நிர்மல்குமாரின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடிய வில்லை ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார் ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம்.

தம்பி அண்ணாமலை கடந்த மாதம் (பிப்ரவரி) டில்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு IT Wing மற்றும் sports and skill development ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு
மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல்குமார் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி'' என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி