ஆப்நகரம்

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை: எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

தர்மபுரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அம் மாவட்டடத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Nov 2019, 9:36 am
தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
Samayam Tamil மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை


சென்னை: புகை மண்டலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் தெரியுமா?

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரியில் பெய்துவருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழைப்பொழிவு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்போல மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் மழை காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மழைப் பொழிவை பொறுத்து உடனடியாக விடுமுறை அறிவிக்கலாம், என மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நம்புங்க இது டில்லி இல்லை, சென்னை தான்: அப்புறம் உங்க முகமூடியை மறந்துடாதீங்க!

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 9) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவுவதுடன் புகை மண்டலமும் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து காற்று மாசு அதிகரித்துவருவதால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

வடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி!

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்று மாசு தரக்குறியீட்டு எண் 358ஆக உள்ளது. வேளச்சேரியில் 289 ஆகவும், ஆலந்தூரில் 237ஆகவும் உள்ளது.

அடுத்த செய்தி