ஆப்நகரம்

பிரதமரை வேட்டி விற்கவைத்த நிறுவனங்கள்!

இந்தியா, சீனா நாடுகளுக்கிடையே நடைபெறும் இரண்டாம் முறைசாரா மாநாட்டில் நேற்று வேட்டி சட்டையுடன் வலம் வந்த மோடியை இன்று வேட்டி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றன.

Samayam Tamil 12 Oct 2019, 12:14 pm
இந்தியாவின் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்குள்ள பாரம்பரிய உடைக்கு மாறுவது பிரதமர் மோடியின் வழக்கம். அந்தவகையில் நேற்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் வேட்டி, சட்டையுடன் கலந்துகொண்டார். அவரது உடை சிறிதுநேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
Samayam Tamil Untitled collage (2)


மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு: தாமதமாக தொடங்கிய நிகழ்வு, உற்சாகம் குறையாத வரவேற்பு!

தமிழில் பேசி தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கும் மோடி, தமிழர் உடை அணிந்து மேலும் அதற்கு வலு சேர்க்கிறார் என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் இன்று காலை செய்தித் தாள்களை அலங்கரிக்கும் என்பது நேற்றே எதிர்பார்த்த விஷயம்தான். ஆனால் செய்திகளில் மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் இடம்பெற்றிருப்பதுதான் கவனிக்கத் தக்கது.

கடற்கரையை தனி ஆளாக சுத்தம் செய்த மோடி: நம்பலைன்னா வீடியோவை பாருங்க!

ராம்ராஜ் நிறுவனம் மோடி வேட்டி சட்டை அணிந்து சீன அதிபரின் கைகளை பற்றியிருக்கும் புகைப்படத்துடன் ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்புடன் தனது நிறுவனத்திற்கு விளம்பரம் தேடியுள்ளது. எம்சிஆர் நிறுவனம் மோடி - ஷி ஜின்பிங்கின் இரு புகைப்படங்களுடன் மோடிக்கு நன்றி தெரிவித்து தங்களது விளம்பரத்தை வடிவமைத்துள்ளது.

ஷி ஜின்பிங் - மோடி சந்திப்பு: இன்னைக்கு ஷெட்யூல் என்ன தெரியுமா?

இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் அதிகாரபூர்வ நிகழ்வின் புகைப்படத்தை ஒரு நிறுவனம் தனது தனிப்பட்ட விளம்பரத்திற்காக பயன்படுத்தியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவாகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசிய போது, “அனுமதி இல்லாமல் எந்த தனி நபரின் புகைப்படத்தை பயன்படுத்துவதும் குற்றமே. அதோடு பிரதமரின் புகைப்படத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. பிரதமரே அவர்கள் மீது வழக்கு தொடுத்து நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கலாம்” என்று கூறினர்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் புகைப்படம் ஜியோ விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மோடி அம்பானி, அதானி உள்ளிட்ட பணக்காரர்களின் நலனுக்காக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த விளம்பரம் நாட்டின் முன்னணி செய்திதாள்கள், சேனல்களில் வலம் வந்தன. பின்னர் அந்த நிறுவனத்துக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி