ஆப்நகரம்

அரசு இ - சேவை மையத்தில் இன்று முதல் டிஜிட்டல் லைப் சான்றிதழ்

அரசு இ - சேவை மையத்தில் ஓய்வூதியர்களுக்கான டிஜிட்டல் லைப் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

TNN 24 Nov 2016, 1:47 pm
அரசு இ - சேவை மையத்தில் ஓய்வூதியர்களுக்கான டிஜிட்டல் லைப் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil digital life certificate issue in govt e serviec center
அரசு இ - சேவை மையத்தில் இன்று முதல் டிஜிட்டல் லைப் சான்றிதழ்


இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , " தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ - சேவை மையங்களை அமைத்து, அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, கூடுதல் சேவையாக நவ.,24 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு, டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்' எனப்படும் மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை துவங்கப்பட உள்ளது.

இந்த சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், இந்த நிறுவனத்தின் இ - சேவை மையத்தில் தங்கள் ஆதார் எண்ணை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால், அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இந்த சேவைக்கு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும்." என்று அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி