ஆப்நகரம்

அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதிய நிா்வாகிகளை நியமித்தாா் தினகரன்

அ.தி.மு.க.வில் அடுத்த அதிரடியாக அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் பலரை நீக்கிவிட்டு புதியதாக நிா்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறாா்.

TOI Contributor 10 Aug 2017, 12:24 am
அ.தி.மு.க.வில் அடுத்த அதிரடியாக அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் பலரை நீக்கிவிட்டு புதியதாக நிா்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறாா்.
Samayam Tamil dinakaran appointed a new union people in anna union
அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதிய நிா்வாகிகளை நியமித்தாா் தினகரன்


அ.தி.மு.க.வில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நிரூபிப்பதில் முதல்வா் பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், துணைப் பொதுச் செயலாளா் தினகரன் உள்ளிட்டோாிடம் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளா் தினகரன் மாவட்டம் தோறும் கட்சி நிா்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்கினாா். இது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சா்கள் சிலா் இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கருத்து தொிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக நேற்று துணைப் பெதுச் செயலாளா் தினகரன் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகளை மாற்றி புதிய நிா்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதன் படி விழுப்புரம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் அண்ணா தொழிற்சங்க புதிய நிா்வாகிகளை நியமித்துள்ளாா். மேலும் திருச்சி பெல் நிறுவன அண்ணா தொழிற்சங்கத்திற்கும் புதிய நிா்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனின் இந்த செயல் அ.தி.மு.க.வில் யாரிடம் அதிகாரம் உள்ளது என்பது குறித்து பொது மக்களிடையே இருந்து வந்த குழப்பமான நிலையை மேலும் அதிகாித்துள்ளது.

Dinakaran appointed a new union people in anna union

அடுத்த செய்தி