ஆப்நகரம்

கனிமொழி, ஆ.ராசா இடத்தில் டிடிவி தினகரன்

திகார் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளில் மூன்றாவது அரசியல்வாதி டிடிவி தினகரன் ஆவார். இதற்கு முன்பாக 2ஜி முறைக்கேட்டு வழக்கில் திமுக மக்களவை எம்.பி கனிமொழியும், முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் இந்த திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டனர்.

TNN 2 May 2017, 11:11 am
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை கைது செய்து 5 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்தனர்.இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரனிடம் நான்கு நாட்கள்விசாரணை நடைபெற்றது. .
Samayam Tamil dinakaran inprison in tihar after kanmozhi a rasa
கனிமொழி, ஆ.ராசா இடத்தில் டிடிவி தினகரன்

இந்தநிலையில் டிடிவி தினகரன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் திங்களன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 15-ஆம் நாள் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். . இதனைத் தொடர்ந்து டெல்லி திகார் சிலையில் டிடிவி தினகரன் அடைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளில் மூன்றாவது அரசியல்வாதி டிடிவி தினகரன் ஆவார். இதற்கு முன்பாக 2ஜி முறைக்கேட்டு வழக்கில் திமுக மக்களவை எம்.பி கனிமொழியும், முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் இந்த திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டனர்.

தற்போது கனிமொழி. ஆ.ராசா அடைக்கப்பட்டிருத்த இடமான திகார் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் டிடிவி தினகரன் சிறைவாசம் அனுபவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

dinakaran inprison in tihar after kanmozhi, a.rasa

அடுத்த செய்தி