ஆப்நகரம்

ரஜினிக்கு சீமான், பாரதிராஜா பதிலடி!

சென்னை சேப்பாக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Samayam Tamil 11 Apr 2018, 2:29 pm
சென்னை சேப்பாக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
Samayam Tamil bharathiraja seeman


அப்போது அவர்கள் கூட்டாக பேசியதாவது:

நாளை ராணுவ கண்காட்சி திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக நாங்கள் கருப்புக் கொடி காட்டுவோம். அவர் ஹெலிகாப்டரில் வந்தாலும், தரையிறங்கி தானே ஆக வேண்டும். தரை தளத்தில் நாங்கள் சுற்றி இருந்து கருப்புக்கொடி காட்டி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். மேலும், ஐபிஎல் போட்டிக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது காவலர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு தவறாக கருத்தை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் போராட்டத்துக்கு செல்லும் போது எங்களுடைய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் அடிக்கத் தொடங்கினர். இதில் ஆத்திரமடைந்த இரண்டு போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால், நாங்கள் காவலர்களை தடுக்கவே சென்றோம். மோதலை சமாதானம் செய்யவே சென்றோம். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் நாங்கள் காலர்களை வேண்டுமென்றே தாக்குவது போல் டுவிட்டரில்கருத்து வெளியிட்டுள்ளார். அதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசையும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

உண்மையில் ரஜினிகாந்த் பேசியது அவருடைய குரல் அல்ல. அது பாஜகவின் குரல். நேற்று நடந்த சம்பவம் வன்முறையா? அப்படி என்றால் காவலர்கள் அத்துமீற தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்களே அதற்கு பெயர் என்ன. களத்தில் நின்று பார்த்தால் தான் உண்மை என்னவென்று புரியும்.

அடுத்த செய்தி