ஆப்நகரம்

Plus 2 Practical Exams: கண்டிப்பா பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்கும் - அரசு தேர்வுத்துறை இயக்குனர்!

வரும் 1ம் தேதி பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2019, 8:56 am
வரும் 1ம் தேதி பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil plus 2


நாடு முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்களது பணி காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அரசு தேர்வு துறை பணியாளர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த நிலையில், தான் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பிளஸ் 2 மாணவ – மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.

அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும் நடக்கயிருக்கிறது. ஆசிரியர்கள், தேர்வுத்துறை பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில், பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏற்கனவே அறிவித்த நாட்களில் திட்டமிட்டபடி நடக்கும். அதில், எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி