ஆப்நகரம்

அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!

குட்கா ஊழல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதவியிலிருந்து நீக்க வலியிறுத்தி ட்விட்டரில் ஹேஸ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

Samayam Tamil 3 Sep 2018, 11:40 am
குட்கா ஊழல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதவியிலிருந்து நீக்க வலியிறுத்தி ட்விட்டரில் ஹேஸ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
Samayam Tamil அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!


தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். முதன் முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதன்பின், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அவரது வீடு, கல் குவாரி, கல்லூரி உள்ளிட்ட 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பின்னர், குட்கா ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி, டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை எவ்வித ,குளறுபடியும் நடைபெறாமல் இருக்க, அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை தந்தை சின்னசாமியிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கிக் கொடுப்பதாக தனது மகன் விஜய பாஸ்கரும், அவரது உதவியாளர்களும் வேலை கேட்டு வந்தவர்களிடம் தலா ரூ. 12 லட்சம் பெற்றார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, ட்விட்டரில் #Dismissgutkavijayabaskar என்ற ஹேஸ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

அடுத்த செய்தி