ஆப்நகரம்

அக்.16 சுதாகரன் விடுதலை? வெளியான முக்கிய தகவல்!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் விடுதலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Oct 2021, 6:05 pm
Samayam Tamil sudhakaran
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரன் அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா காலமானதால் மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை கட்டாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி இருவருக்கும் அபராதத் தொகை செலுத்தப்பட்டது. இதனால் சசிகலா ஜனவரி 27ஆம் தேதியும், இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதியும் விடுதலையாகினர். சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்தப்படாததால் அவர் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

திமுகவுக்கு டெல்லி வைக்கும் செக்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சுதாகரன் விடுதலையாக வேண்டிய நிலையில், ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் சிறையில் இருந்த 89 நாட்களை கணக்கிட்டு வருகின்ற 16ஆம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதிதான் சசிகலா நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி