ஆப்நகரம்

தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றத்தடை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...

கொரோனா வைரஸ் பீதியால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Samayam Tamil 17 Mar 2020, 9:03 pm
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகாமாகியுள்ளன. இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பராவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Samayam Tamil தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றத்தடை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு


இதனிடையே மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, '' கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் வருகின்ற 31ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவித்தார். மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றார். தங்கும் விடுதிகளும் வருகின்ற 31ம் தேதி வரை மூடவேண்டும் என்றார். மேலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கிருந்து மாவட்டத்திற்கு வருபவர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள் என தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம்: தமிழக அரசு நடவடிக்கை

இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 8 பேர் நலமுடம் இருப்பதாகவும், தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருதாகவும் தெரிவித்தார். மாவட்டத்தை இனைக்கும் 8 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் மருத்துவகுழு செயல்படும் எனவும், மேலும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றார். இதனை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உட்டபட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றபட்டு பூங்கா முடப்பட்டது.

அடுத்த செய்தி