ஆப்நகரம்

ஈஷா யோகா மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஈஷா யோகா மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கிப்பன் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினார்.

TOI Contributor 11 Aug 2016, 11:11 am
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஈஷா யோகா மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கிப்பன் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினார்.
Samayam Tamil district judge investigated in isha yoga centre
ஈஷா யோகா மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை!


கீதா மற்றும் லதா எனும் சகோதரிகள் இருவரை அவர்களின் விருப்பமில்லாமல் ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களுக்கு மூலைச்சலவை செய்வதாகவும் அவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் விசாரணையில் ஈடுபட்டனர்.

இரண்டு பெண்களிடமும் மற்றும் ஈஷா யோகா மைய நிர்வாகி ரமேஷ் என்பவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் லதா, கீதா ஆகிய இருவரும் விருப்பப்பட்டுதான் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். எவரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் பெற்றோர் அங்கு வந்து தங்கிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தனர். விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

அடுத்த செய்தி