ஆப்நகரம்

தேர்தலின்போது அரசு அலுவலர்களை பணி மாற்றக்கூடாது: மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

தேர்தலுக்காக அரசு அலுவலர்களை வெளி மாவட்டத்திற்க்கு பணி மாறுதல் செய்தால் ஒட்டு மொத்த தேர்தல் பணிகளும் பாதிக்கும் என சேலம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 6 Mar 2019, 5:41 pm
தேர்தலுக்காக அரசு அலுவலர்களை வெளி மாவட்டத்திற்க்கு பணி மாறுதல் செய்தால் ஒட்டு மொத்த தேர்தல் பணிகளும் பாதிக்கும் என சேலம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil ko


காவல் துறையினரை போன்று வட்டாச்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தேர்தல் பணிக்காக வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் அலுவலர்கள் இன்று எட்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு தேர்தலின் போது பல்வேறு சிக்கலை ஏற்ப்படுத்துவதோடு, தேர்தல் நன்முறையில் நடைபெற வழிவகுக்காது என்று எச்சரிக்கை விடுத்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் வருவாய் துறையினர் தேர்லுக்காக வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்தால் தேர்தல் பணியில் குழப்பம் ஏற்ப்படும் என்பதால் இந்திய தேர்தல் ஆணையம் இந்த புதிய நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த செய்தி