ஆப்நகரம்

உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

உலக அளவில் 2018ம் ஆண்டின் சிறந்த நடிகராக விஜய் தேர்வாகியுள்ளார். அவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Sep 2018, 2:07 pm
மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகா் விஜய்யை 2018ம் ஆண்டின் சா்வதேச சிறந்த நடிகராக தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தேமுதிக விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Samayam Tamil vijay vijayakant


கடந்த 2014ம் ஆண்டு முதல் லண்டனைச் சோ்ந்த IARA (International Achievement Recognition Awards) அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சா்வதேச அளவில் விருதுகளை வழங்கி திரைத்துறையினரை கௌரவித்து வருகிறது.

இந்நிலையில் மொ்சல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகா் விஜய் 2018ம் ஆண்டின் உலகின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதாக IARA அமைப்பு அறிவித்துள்ளது. இந்த விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பாலிவுட் நடிகா்கள் ஒருவா் கூட இடம் பெறாத நிலையில் விஜய் பரிந்துரைக்கப்பட்டு உலகின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளாா் என்பது கூடுதல் சிறப்பு

இதனையடுத்து, சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

அடுத்த செய்தி