ஆப்நகரம்

சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம்!

சிகிச்சை முடிந்ததும் பழைய கம்பீரத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவார் என்று மூத்த மகன் பிரபாகரன் தகவல்

Samayam Tamil 14 Dec 2018, 12:41 pm
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijayakanth


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவருடைய அரசியல் பொறுப்புகளை அவர் மனைவி பிரேமலதா கவனித்து வந்தார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்ததும் இந்தியா திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதனிடையே அவ்வபோது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்துக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக அவருடைய மூத்தமகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில்விஜயகாந்தின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன் கூறியதாவது:

'ரஜினி, கமல் இருவரும் அரசியலில் களம் இறங்கியுள்ளார்கள். அவர்கள் இருவருமே விஜயகாந்தின் ஜூனியர்கள் தான். அவர்களுடன் எங்களை ஒப்பிட வேண்டாம். இப்போது தேர்தல் வந்தாலும் தேமுதிக முழு மூச்சுடன் போராடி வெற்றி பெறும். ஆனால், தேர்தல் நடத்துவதில் ஆளும் கட்சி தயக்கம்காட்டுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானால் எங்களுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்குவோம். விஜயகாந்துக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சையளிக்கப்பட உள்ளது. இதற்காக விரைவில் அவர் அமெரிக்கா செல்வார். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் அதே பழைய கம்பீரத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி