ஆப்நகரம்

பழையபடி திரும்புவாரா விஜயகாந்த்? மதுரை தொண்டர்கள் கிடா வெட்டி வேண்டுதல்!!

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் விஜயகாந்த், குணமடைந்து மீண்டும் பழையபடி அரசியலில் செயல்பட வேண்டும் என மதுரை தேமுதிக தொண்டர்கள் கிடா வெட்டி வேண்டியுள்ளனர்.

Samayam Tamil 5 Jul 2018, 11:28 pm
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் விஜயகாந்த், குணமடைந்து மீண்டும் பழையபடி அரசியலில் செயல்பட வேண்டும் என மதுரை தேமுதிக தொண்டர்கள் கிடா வெட்டி வேண்டியுள்ளனர்.
Samayam Tamil பழையபடி திரும்புவாரா விஜயகாந்த்? மதுரை தொண்டர்கள் கிடா வெட்டி வேண்டுதல்!!
பழையபடி திரும்புவாரா விஜயகாந்த்? மதுரை தொண்டர்கள் கிடா வெட்டி வேண்டுதல்!!


மதுரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு முனியாண்டி சுவாமி கோவில், மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கும்போது, முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் பூஜை செய்த பின்தான் தொடங்கும்.

இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் குணமடைந்து, மீண்டும் பழையபடி அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று மதுரை புறநகர் தேமுதிக தொண்டர்கள், இந்தக் கோவிலில் கிடா வெட்டி வேண்டுதல் நடத்தியுள்ளனர்.

மதுரை தொண்டர்கள் கிடா வெட்டி வேண்டுதல்!!

இந்தச் சிறப்புப் பூஜையில் தே.மு.தி.க வடக்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், தெற்கு மாவட்டச் செயலாளர் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி