ஆப்நகரம்

ஸ்டாலினை விளாசிய பிரேமலதா விஜயகாந்த்!!

எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்பதற்காக நடக்கும் அனைத்து சம்பங்களையும் எதிர்க்க வேண்டும், குறை செல்ல வேண்டும் என்பது இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வம்புக்கு இழுத்துள்ளார்.

Samayam Tamil 17 Oct 2019, 12:06 pm
எதிர்கட்சித் தலைவர் என்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டக் கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil DMDK 5


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திருந்த அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது, ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்றாலே குறைகளை மட்டுமே கூற வேண்டும் என்ற நோக்கத்தில், எண்ணத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

திமுகவுக்கு மக்கள் இந்த தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு காரணமே திமுகதான்'' என்றார்.

மைக்க தூக்கி அடிச்சா விஜயகாந்த், கடிச்சு துப்புனா ராஜேந்திர பாலாஜி!

தமிழகத்தில் நடக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளன. விக்கிரவாண்டியில் அதிமுக, திமுகவும், நாங்குநேரியில் அதிமுகவும், காங்கிரசும் களம் காணுகின்றன. நாங்குநேரியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் களம் காணுகின்றனர்.

விஜயகாந்த் தான் மாஸ்- ஸ்டாலின் எல்லாம் காணாமல் போயிருப்பார்- சிவி சண்முகம்!

தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் ஆதரவு கேட்டு இருந்தனர். இதையடுத்து அதிமுகவுக்கு தேர்தலில் தேமுதிக அதிகாரபூர்வ ஆதரவு தெரிவித்து இருந்தது.

மவுசு குறையாத விஜயகாந்த்- படையெடுத்துச் சென்ற அதிமுக அமைச்சர்கள்!

இந்த நிலையில்தான் நாங்குநேரியில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வரும் வாரத்தில் விஜயகாந்தும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

அடுத்த செய்தி