ஆப்நகரம்

ரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பெரியார் குறித்து ரஜினிகாந்த் தற்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Jan 2020, 12:43 am
பெரியாரை பற்றி ரஜினிகாந்த் தற்போது பேச வேண்டிய அவசியமில்லை என்றும், அவர் வெறும் அம்புதான் என்றும், அவரை வேறு யாரோ வழி நடத்துகிறார்கள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Samayam Tamil ரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்


108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு மேல் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். வீரராகவப் பெருமாளை தரிசித்த பிரேமலதா விஜயகாந்த், கோயில் குளத்தில் பால் வெல்லம் ஆகியவற்றை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

ரஜினி, ஸ்டாலின், தினகரன் அனைவரையும் வருத்ததெடுத்த அமைச்சர் வீரமணி!

அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர் கூறியது:

பெரியாரைப் பற்றி 'துக்ளக்' விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதையும் யோசித்து பேசக்கூடிய அவர் இந்த கருத்தை பேசுகிறார் என்றால் அவரை வேறு யாரோ இயக்குகிறார்கள் என்றும், அவர் வெறும் அம்பு தான்.

மேலும், குடியுரிமைச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் வீண் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் கேள்வி

வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து, தக்கசமயத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

அடுத்த செய்தி