ஆப்நகரம்

கனிம வளக் கொள்ளை; அமைச்சர்கள் மீது சந்தேகம்... விஜய பிரபாகரன் ஓபன் டாக்..

கன்னியாகுமரியில் நடந்து வரும் கனிம வளக் கொள்ளையில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது என்று தேமுதிக விஜய பிரபாகரன் வெளுத்து பேசியுள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 6 May 2023, 1:38 pm
நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து தின்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொள்ளை அடித்து செல்வதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர். இப்படி கொள்ளை அடித்து செல்லும் லாரிகளை வழி மறித்தாலோ, ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ காவல்துறை கைது நடவடிக்கை எடுத்து ஒடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
Samayam Tamil vijaya prabagaran


இந்த நிலையில், கன்னியாகுமரியில் நடக்கும் கனிம கொள்ளைக்கு திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கும், அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தேமுதிக விஜயபிரபாகரன் பகிரங்கமாக கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கு பிறகு ஒய்வு என இருந்து வரும் அவரால் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டும் தொடர்களுக்காக சில நொடிகள் அவரை திறந்த வேனில் காண்பித்து பின்னர் மீண்டும் அழைத்து சென்றுவிடுகின்றனர். இந்த நிலையில், கட்சி நீர்த்துப்போகாமல் இருக்க அவரது மனைவி, மகன்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும், அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.


அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் நடந்த கட்சி நிர்வாகி வீட்டு திருமண விழாவுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது கட்சி தொண்டர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் பேசியதாவது; கன்னியாகுமரியில் நடக்கும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் துரைமுருகனுக்கும், மனோ தங்கராஜுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

அதிமுக ஆட்சியில் கனிம வள கொள்ளைக்கு எதிராக பேசிய மனோ தங்கராஜ் தற்போது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறார். குமரியில் இருந்து தினமும் 500 லாரிகளில் கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. இது முதல்வருக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இதற்கு அந்த அமைச்சர்களும், முதல்வரும் பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.

அதனை தொடர்ந்து 'திராவிட மாடல்' ஆட்சி என்பது வெறும் அறிக்கை வடிவில் மட்டும்தான் உள்ளது என்றும் செயல்பாட்டில் இல்லை என்றும் கூறிய விஜயபிரபாகரன் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் குறித்து நீதிமன்றம் தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி