ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விஜயகாந்த் எதிர்ப்பு

அச்சம் விளைவிக்கும் திட்டங்களைத் தமிழகத்தில் மட்டுமே கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

TNN 27 Feb 2017, 12:22 am
சென்னை: அச்சம் விளைவிக்கும் திட்டங்களைத் தமிழகத்தில் மட்டுமே கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dmdk vijayakanth statement on hydro carbon scheme
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விஜயகாந்த் எதிர்ப்பு


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அச்சம் விளைவிக்கும் திட்டங்களைத் தமிழகத்தில் மட்டுமே கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெயில் எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம் போன்ற அச்சமூட்டும் திட்டங்களைத் தமிழகத்தில் மட்டுமே மத்திய அரசு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரும் முன்பாக, அவற்றின் நன்மை, தீமைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சரியான திட்டம் தான் என அதனை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதனை தேமுதிக ஆதரிக்கும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்றுவது நமது கடமையாகும் எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DMDK vijayakanth statement on Hydro carbon scheme

அடுத்த செய்தி