ஆப்நகரம்

ஒரு மாதகால சிறப்பு ஊதியம்: விஜயகாந்த் வலியுறுத்தல்

கொரானா கொடிய நோயிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடும் காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 26 Mar 2020, 4:34 pm
சென்னை: காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil விஜயகாந்த்
விஜயகாந்த்


கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அதுதவிர, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்ட பொது மக்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா இடர்பாடுகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளார்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா: நெல்லையில் சரீர இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை!

அந்த வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கும் அறிவிப்புக்கு தேமுதிக பொதுச்செயலாளார் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கியதைப்போல் கொரானா கொடிய நோயிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடும் காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


கடும் வெயிலையும் பாராமல் காவலர்களும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு இந்த பணிகளை செய்து வரும் அனைவருக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி