ஆப்நகரம்

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: திமுக, அதிமுக அஞ்சலி!

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அஞ்சலி செலுத்தின.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 3 Feb 2023, 11:53 am
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று (பிப்ரவரி) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil annadurai


அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், திமுகஅமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனனர்.
டெல்லியின் முடிவை அறிவித்த அண்ணாமலை: ஓபிஎஸ் ஓகே.. எடப்பாடி எஸ் சொல்வாரா?
பேரணியின் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், முத்துசாமி, எம்.ஆர்.காந்தி, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. டி.ஆர் பாலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்!

தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!

தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லிக்கு ஆள் அனுப்பிய எடப்பாடி: அடுத்தகட்ட நகர்வு என்ன?
அதிமுக சார்பில் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி