ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 50,000மாம்... வாய் பிளக்க வைத்த திமுக அமைச்சர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 5 Feb 2023, 3:40 pm

ஹைலைட்ஸ்:

  • வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
  • இதில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்
  • திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil TM Anbarasan
தமிழ்நாட்டில் தினசரி தலைப்பு செய்தியாக மாறியிருப்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தான். வரும் மார்ச் 2ஆம் தேதி வரை இந்த அலை ஓயாது. அரசியல் கட்சிகள் தங்களை மணிக்கொரு முறை செய்தி தொலைக்காட்சிகளில் இடம்பெற செய்யும் வகையில் செயல்பாடுகளை அமைத்து கொண்டுள்ளன. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு என்றாலும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை பரபரப்பிற்கு பஞ்சமிருக்கிறது.
கொங்கு மண்டலம்

இதில் ஸ்வீட் பாக்ஸ் விநியோகம் படுஜோராக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈரோடு கிழக்கு எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ளது. இதனால் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். ஒருபுறம் இரட்டை இலைக்காக நீதிமன்ற வாசல்களுக்கு நடையாய் நடந்தாலும், மறுபுறம் 4 குழுக்களை இறக்கிவிட்டு திமுகவினரை மிகவும் நெருக்கமாக கண்காணித்து தகவல்களை பெற்று வருகிறாராம்.
ஓபிஎஸ் வந்தால் ஈபிஎஸ் ஏற்பாரா? இடைத்தேர்தல் ட்விஸ்ட்... ஜெயக்குமார் பளீச்!
திருமகன் ஈவேரா மறைவு

அதற்கேற்ப தனது அடுத்தகட்ட நகர்வுகளை அமைத்து கொண்டிருக்கிறார். மறுபுறம் ஆளுங்கட்சி தரப்பு எந்தவித சலசலப்புகளும் அஞ்சவில்லை. தங்கள் ரூட் கிளியர் என்றும், திருமகன் ஈவேரா விட்டு சென்ற பணிகளை நாங்கள் முடிப்போம் என்றும் கூறினார். மக்களும் அதைத்தான் விரும்புவர் என்று கூறி பெருமிதம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் குடும்ப பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட சில விஷயங்கள் நெருடலாக வந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமைச்சர் பேட்டி

இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாங்கள் வாக்கு கேட்டு செல்லும் போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. பொதுமக்களிடம் பெரிய எழுச்சியை காண முடிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

வாக்கு வித்தியாசம்

நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக 320 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் உடனடியாக திட்டங்களை செயல்படுத்த முடியாது.
எடப்பாடி முதல்வர் ஆவதற்கு பாஜக தேவை; ஓபிஎஸ் அணி புகழேந்தி உறுதி.!
மக்கள் கோரிக்கைகள்

தேர்தல் முடிந்த பின்னர் 6 மாதத்திற்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். வன்னியர்கள் சில கோரிக்கைகள் வைத்திருந்தனர். அவையும் தேர்தல் முடிந்த பிறகு நிறைவேற்றி தரப்படும். திருமகன் ஈவேரா எம்.எல்.ஏவாகி ஒன்றை ஆண்டு காலத்திலேயே இறந்து விட்டார். அவருக்கு பதிலாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார். விடுபட்ட பணிகளையும், புதிய திட்டங்களையும் உங்களுக்கு கொண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி