ஆப்நகரம்

தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் மாற்றம்!

மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் செயலாளர்களை மாற்ற, திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

TNN 15 Aug 2016, 8:01 pm
மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் செயலாளர்களை மாற்ற, திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
Samayam Tamil dmk district functionaries to be changed ahead of local civic body elections
தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் மாற்றம்!


தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து, தற்போது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதையொட்டி, ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான திமுக, தனது மாவட்டச் செயலாளர்களை மாற்றிவருகிறது. ஏற்கனவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான முறையில் கட்சி பணியாற்றவில்லை என்பதன்பேரில், இந்த மாற்றங்களை, திமுக தலைமை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, நாமக்கல், திருநெல்வேலி, துாத்துக்குடி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் தி.மு.க., செயலாளர்கள் மாற்றப்படுவதாக, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் செயலாளர்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி