ஆப்நகரம்

விடிய விடிய வாக்கு எண்ணிக்கை: ஒன்பது மாவட்டத்திலும் சூரியன் ஆதிக்கம்!

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க திமுகவே ஆதிக்கம் செலுத்துகிறது.

Samayam Tamil 13 Oct 2021, 8:02 am
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (அக்டோபர் 12) காலை தொடங்கி விடிய விடிய நடைபெற்றுவருகிறது.
Samayam Tamil dmk won


வாக்கு சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றதால் எண்ணும் பணி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கையே ஓங்கியுள்ளது. அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்குமான வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது.
தேவர் ஜெயந்தியை குறிவைக்கும் சசிகலா: சுற்றுப் பயணத் திட்டம் இதுதான்!
9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுகவே கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களும் பெரும்பாலானோர் திமுக கூட்டணியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுகவே ஆதிக்கம் செலுத்துகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் திமுக 136 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கோயில் நகைகளை உருக்கும் திட்டம்: அடேங்கப்பா, இவ்வளவு வருமானமா?
ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலில் 907 இடங்களில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. அதிமுக கூட்டணி 190 இடங்களிலும், பாமக 42 இடங்களிலும், தேமுதிக 1 இடத்திலும், அமமுக 4 இடத்திலும் சுயேச்சைகள் 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி