ஆப்நகரம்

விஜயபாஸ்கரை நீக்க கோரி மனு: ஆளுநரை சந்திக்கும் மும்பை செல்லும் திமுக

தமிழக அரசியல் சூழல் குறித்து, ஆளுநரை சந்தித்து முறையிட திமுகவினர் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

TNN 11 Apr 2017, 11:19 am
சென்னை: தமிழக அரசியல் சூழல் குறித்து, ஆளுநரை சந்தித்து முறையிட திமுகவினர் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil dmk duraimurugan rs bharathi will meet tn governor in mumbai
விஜயபாஸ்கரை நீக்க கோரி மனு: ஆளுநரை சந்திக்கும் மும்பை செல்லும் திமுக


தமிழகத்தில் தொடர்ச்சியாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வீடு, அலுவலகம், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த சூழலில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்தும், அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கக் கோரியும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் முறையிட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக திமுகவின் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நாளை மும்பை புறப்பட்டு சென்று, ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளனர்.

DMK Duraimurugan, RS Bharathi will meet TN Governor in Mumbai.

அடுத்த செய்தி