ஆப்நகரம்

டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு; திமுக ஆதரவு

வரும் வெள்ளிக்கிழமையன்று டெல்டா பகுதி விவசாயிகளை ஆதரித்து நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

TNN 17 Aug 2016, 4:55 pm
வரும் வெள்ளிக்கிழமையன்று டெல்டா பகுதி விவசாயிகளை ஆதரித்து நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
Samayam Tamil dmk extends support to left backed bandh in tamil nadu
டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு; திமுக ஆதரவு


கடந்த 3 மாதங்களாக, மேட்டூர் அணைக்கு வரவேண்டிய காவிரி நதிநீரை, கர்நாடகா அரசு திறந்துவிடவில்லை. இதனால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அரசு உடனடியாக தண்ணீரை திறந்துவிட்டால் மட்டுமே, மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பிழைக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இதுதொடர்பாக, எந்த அக்கறையும் காட்டாத அம்மாநில அரசு, புதியதாக, மேகதாது பகுதியில் காவிரி நதிமீது தடுப்பணை ஒன்றை கட்டவும் முயற்சித்து வருகிறது. இதில், தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தகதியில் உள்ளதாக, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், இடதுசாரி கட்சிகள் வரும் 19ம் தேதியான வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்து, திமுக.,வும் முழு அடைப்பில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை பெற்றுத்தரும் வகையில், எதிர்க்கட்சி என்ற முறையில் அனைத்துவிதமான பங்களிப்பையும் திமுக வெளிப்படுத்தும் என்று, திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி