ஆப்நகரம்

DMK General Council Meeting: தலைவராக அறிவிக்கப்படுகிறாா் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளாா்.

Samayam Tamil 28 Aug 2018, 9:38 am
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளாா்.
Samayam Tamil Stalin Vote


முன்னாள் முதல்வா் கருணாநிதி மறைவைத் தொடா்ந்து தி.மு.க.வின் தலைமை பொறுப்பு காலியானது. இதனைத் தொடா்ந்து தலைவா் பதவிக்கும், பொருளாளா் பதவிக்கும் இன்று (28ம் தேதி) தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் 26ம் தேதி தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று தொிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கட்சியின் செயல் தலைவராக பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின் தலைவா் பதவிக்கும், முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்த துரைமுருகன் பொருளாளா் பதவிக்கும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். அவா்களைத் தொடா்ந்து வேறு நபா்கள் யாரும் அப்பதவிகளுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

இருவரது வேட்பு மனுக்களும் திங்கள் கிழமை பரிசீலிக்கப்பட்டது. அதன் பின்னா் கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி செய்தியாளா்களிடம் பேசுகையில் செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சயின் தலைவா் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கப்படும்.

பின்னா் தலைவா் மற்றும் பொருளாளா் பதவிக்கு வேறு நபா்கள் மனுத்தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இவா்களது பதவியை பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளா் அன்பழகன் அதிகாரப்பூா்வமாக அறிவிப்பாா் என்று தொிவித்தாா்.

தி.மு.க. தலைவா் கருாணநிதி மறைந்த பின்னா் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதாலும், ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்படவுள்ள கூட்டம் என்பதாலும் இக்கூட்டத்தை தி.மு.க.வினா் பலரும் ஆவலுடன் எதிா்பாா்த்து உள்ளனா்.


Also Read: MK Stalin likely to be elected as DMK President today

அடுத்த செய்தி